ரஜினிக்காக 2 பிளாக்பஸ்டர் படங்களை இழந்த கீர்த்தி.... இந்த படங்களையா மிஸ் பண்ணிருக்காங்க!
நடிகை கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக 2 பிளாக்பஸ்டர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை கீர்த்தி
சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்த கீர்த்திக்கு எல்லா மொமிகளிலும் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக 2 பிளாக்பஸ்டர் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷைிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அதே போல் தெலுங்கில் நானி – சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கராய் படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாகவும், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்று கருதி இந்த 2 படங்களிலும் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டாராம்.
ஆனால் அண்ணாத்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்த நிலையில், பொன்னியின் செல்வம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதே போல் நானி நடித்த ஷியாம் சிங்கராய் படமும் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |