என்ஜின் செயலிழந்தும் சாதனை படைத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் -26 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்!
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட், சோதனைப் பயணத்தின் போது என்ஜின் கோளாறு ஏற்பட்ட போதிலும் முதன்முறையாக விண்வெளியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்து, அதில் கொண்டு செல்லப்பட்ட 26 புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களையும் திட்டமிட்டபடி நிலைநிறுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் தனது 14ஆவது சோதனைப் பயணமாக விண்ணில் ஏவப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ராக்கெட்டின் செயல்திறனைச் சோதிப்பதுடன், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தும் திறனை பரிசோதிப்பதாகும்.
விண்ணில் புறப்பட்ட பின்னர் பயணம் திட்டமிட்டபடி நடைபெற்று வந்த நிலையில், ராக்கெட்டின் ஒரு என்ஜின் எதிர்பாராதவிதமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே செயலிழந்தது.
இதனால் சோதனைப் பயணத்தின் கால அளவு குறைக்கப்பட்டாலும், ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ராக்கெட்டின் முக்கிய செயல்பாடுகளை முழுமையாகத் தடுக்கவில்லை.
என்ஜின் கோளாறு ஏற்பட்ட நிலையிலும் ஸ்டார்ஷிப் தொடர்ந்து பயணித்து விண்வெளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து, ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 26 புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் எதிர்கால செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் விண்வெளிப் போக்குவரத்து திட்டங்களில் முக்கியமான சோதனையாகக் கருதப்படுகிறது.

முதலில் சுமார் 10 மணி நேரம் நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம், என்ஜின் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
பயணத்தின் இறுதிக்கட்டத்தில், ஸ்டார்ஷிப் பசிபிக் பெருங்கடல் பகுதியில் திட்டமிடப்பட்ட இடத்தை நோக்கி திரும்பி, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வளிமண்டலத்தில் நுழைந்து தீப்பற்றி எரிந்தது.
இந்தச் சோதனைப் பயணத்தில் ராக்கெட்டை மீண்டும் மீட்கும் நடவடிக்கை எதுவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவில்லை.
இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையிலும் சுற்றுப்பாதையை அடைந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியிருப்பது, ஸ்டார்ஷிப் திட்டத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க கட்டமாக பார்க்கப்படுகின்றது.
ஸ்டார்ஷிப் திட்டம் எதிர்காலத்தில் அதிக எடையுள்ள சரக்குகள் மற்றும் மனிதர்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதற்கான ஸ்பேஸ்எக்ஸின் முக்கிய முயற்சியாகும்.
எனவே, ஒவ்வொரு சோதனைப் பயணத்திலும் கிடைக்கும் வெற்றிகளும் எதிர்கொள்ளப்படும் தொழில்நுட்பச் சவால்களும் அடுத்தடுத்த பயணங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையபதது என்பது குறிப்பிடத்தக்கது.
Starship achieved orbit on its first attempt and successfully delivered Starlink V3 satellites to space for the first time → https://t.co/LwJ4g6dNZ3 https://t.co/pnd3k8x6E0
— SpaceX (@SpaceX) September 28, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |