ஸ்டார் மியூசிக் நிகழ்சியில் களமிறங்கிய விஜய் TV பிரபலங்கள்... தீயாய் பரவும் காணொளி
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் நிகழ்சியின் சீசன் 6 நிகழ்சியில் இந்த வாரம் கலந்துக்கொள்ளப்போகும் போட்டியாளர் விபரங்கள் அடங்கிய promo காணொளியை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
ஸ்டார் மியூசிக் சீசன் 6
சின்னத்திரை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை கொடுப்பத்தில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சீரியல் என்றாலும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கூட்டம் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஸ்டார் மியூசிக்.அதுவரையில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6 ஆவது சீனன் வெற்றிநடை போட்டு வருகின்றது.
தற்போது ஸ்டார் மியூசிக் சீசன் 6 -இல் இந்த வாரம் பங்கேற்கவுள்ள போட்டியாளர் விபரங்கள் அடங்கிய promo காணொளியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் பிரியங்கா தேஷ்பாண்டேவின் ரசிகர்களையும் ஸ்டார் மியூசிக் ரசிகர்களையும் பெரும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.