மறைந்த கணவனின் அழகான நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்த ஸ்ருதி... ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே கணவனை இழந்த சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தன் கணவனுடன் இருந்த பழைய நினைவுகளை உருக்கமாக பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.
சீரியல் நடிகை ஸ்ருதி
பிரபல தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த நாதஸ்வரம், மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
சீரியல்களில் சில காலம் காணாமல் போயிருந்த இவர், பாரதி கண்ணம்மா பாகம் ஒன்றில் நடித்திருந்தார். அதன்பின் இவருக்கு மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்ற அரவிந்த சேகர் என்பவருடன் வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றிருந்து.
திருமணம் முடித்து முதல் வருடத்திலேயே அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
கணவனின் நினைவுடன்
இந்நிலையில், ஸ்ருதி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் மறைந்த கணவனின் அழகிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போதும் அவர் ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அவரின் இந்த பதிவானது பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |