இறந்து போன கணவருக்காக சீரியல் நடிகை செய்த விடயம்- காரணம் என்ன சொல்கிறார் தெரியுமா?
இறந்து போன கணவருக்காக சீரியல் நடிகை ஸ்ருதி செய்த விடயம் இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
இவர், பள்ளி மாணவியாக இருந்தபோதே சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டராம்.
இதனை தொடர்ந்து வாணி ராணி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார்.
சீரியல்களில் நடித்துக் கொண்டே தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த ஸ்ருதி, 2022ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ருதி செய்த விடயம்
இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரவிந்த் உயிரிழந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், சுமாராக 2 வருடங்கள் வாழ்ந்த பின்னர் இறந்து விட்டார் என்பதை ஸ்ருதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தன்னுடைய மாமியார் வீட்டில் இருந்து கொண்டு, தன்னுடைய கணவர் தன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி சண்முகப்பிரியா ஆந்தையின் உருவத்தை டாட்டூவாக போட்டுள்ளார். அந்த ஆந்தைக்கும் அவருக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், ஸ்ருதிக்கு ஆறுதலாக பேசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |