அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்... சமந்தாவின் விவாகரத்துக்கு சர்ச்சையான கருத்தை கூறிய ஸ்ரீரெட்டி!
தென்னிந்திய சினிமாவில், இளம் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சமந்தா - நாக சைதன்யா, இருவரும் திடீர் என பிரிவதாக அறிவித்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, தற்போது வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை தற்போது வரை தெரிவிக்கவில்லை. எனவே நெட்டிசன்கள் பல்வேறு யுகங்களின் அடிப்படையில் கட்டுக்கதைகளை அள்ளிவிட துவங்கினர்.
இந்நிலையில், சமந்தாவின் விவாகரத்து குறித்து, சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சமந்தாவின் விவாகரத்துக்கு கண்டிப்பாக ப்ரீத்தம் காரணமாக இருந்திருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ப்ரீத்தம் ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவே அவரால் எவ்வித பிரச்னையும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை, சமந்தாவின் கிளாமர் போட்டோ ஷூட் கூட இவர்களது விவாகரத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பது போன்ற சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.