KGF நடிகர் யாஷ் படப்பிடிப்பில் தவறாக நடந்து கொண்டாரா? பிரபல நடிகை உடைத்த உண்மை
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகர் யாஷ், படப்பிடிப்பில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக வெளியான சம்பவத்திற்கு அவருடன் நடித்த நடிகை சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீநிதி ஷெட்டி, இவர் சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் மக்களிடையே கடும் பிரலமாகியுள்ளார்.
பின்பு தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தின் மூலம அறிமுகமானா இவருக்கு வாய்ப்புகள் அடுத்து விக்கரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இப்படம் தோல்வி அடைந்ததால், மீண்டும் கன்னட திரையுலகிற்கே சென்றுவிட்டார். இந்நிலையில் கே ஜி எஃப் படத்தில் நடித்த போது நடிகர் யாஷ் ஸ்ரீநிதியிடம் தவறாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது.
இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி, “ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கே.ஜி.எஃப் உலகத்தில் பணியாற்றியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
யாஷ் ஒரு உண்மையான ஜெண்டிமேன், நல்ல நண்பர் மற்றும் என்னை ஊக்குவிப்பவர். எப்போதும் நான் அவரது ரசிகை தான்” என பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரீநிதி.