நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... இந்த ஒரு பொருளை சேர்தால் அசத்தலா இருக்கும்!
பொதுவாகவே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் முட்டை நிச்சயம் முக்கிய இடம் வகிக்கின்றது.
புரதத்திற்கான சிறந்த மூலமாக திகழும் முட்டை கூந்தல் வளர்ச்சி முதல் அதய ஆரோக்கியம் வரையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை வழங்குகின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டையை கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமான சுவையில் முட்டை குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தே.கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 கப்

அரைக்க தேவையானவை
இஞ்சி - 1/2 இன்ச் அளவு
பூண்டு - 5 பல்
மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 3
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீள வாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்டிகொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து துருவிய தேங்காயுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு, மல்லித்தழை மூன்றும் சேர்த்து அரைத்த கலவையையும் சேர்த்து, வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் கிளறிவிட்டு தேங்காய் பாலையும் சேத்து நன்றான வேகவிட வேண்டும்.
பின்பு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வேகவிட்டு, முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் சுவையான முட்டை உருளைக்கிழங்கு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |