இலங்கையின் பிரபல்யமான தேங்காய் சம்பல்... அடுப்பே இல்லாம எப்படி செய்வது?
பொதுவாகவே உலகளாவிய ரீதியில் உணவை பொருத்தமட்டில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
பொரும்பாலும் தேங்காய் வைத்து சட்னி தான் செய்வார்கள். ஆனால் இலங்கை மக்களின் விருப்பத்தை வென்ற தேங்காய் சம்பல் எப்படி எளிமையான முறையில் வெறும் பத்தே நிமிடத்தில் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய்- கப்
மிளகாய் தூள்- 1 தே.கரண்டி
பெரிய வெங்காயம்- 1
எலுமிச்சை- 1/2 பாதி
உப்பு -தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காயை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுது அதில் சிறிய துண்களாக வெட்டப்பட்ட வெங்காயம், மிளகாய் தூள், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து, எலுமிச்சையை பிழிந்துவிட்டுக்கொள்ளவேண்டும்.
இறுதியில் சுத்தமாக கைகளால் நன்றாக பிசைந்துவிட்டால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில் அடுப்பே இல்லாமல் அசத்தல் தேங்காய் சம்பல் தயார்.
இது இலங்கையில் மிகவும் பிரபல்யம் பிரெட், சப்பாத்தி, புட்டு, இடியாப்பம் என அனைத்துக்கும் சூப்பராக பொருந்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |