இலங்கையில் பதிவான ஆபத்தான அதிசயம்! மேகம் கீழிறங்கி கடலை உறிஞ்சிய காட்சி - மிரண்டு போன மக்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் சுழல் காற்று கடல் நீரை அள்ளிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.
இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கிச் சென்றது.
சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்பரப்பில் மேகம் கீழிறங்கி வந்து கடல் நீர் எடுக்கும் அரிய நிகழ்வு ரொனாடோ எனப்படும் ஒருவகைச் சூழல் காற்று ஆகும்.
மேகம் கீழிறங்கி வந்த அரிய காட்சி
சுழல் காற்று என்பது மின்னலையும், இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்து வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரல் ஆகும்.
இச் சுழல் காற்று சிறிய அளவிலான சூறாவளியாகும்.
எனினும், இவை சூறாவளியிலும் பார்க்கப் பயங்கரமானவை. இச்சுழல் காற்றின் விட்டம் ஏறக்குறைய 100 மீற்றர்களாகும்.
இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 160 - 480 கிலோ மீற்றர் என்ற அளவில் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.