ஜனாதிபதியின் நீச்சல் குளம் மற்றும் சமையலறைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் செய்த அலப்பறை - வைரல் வீடியோ
இலங்கையில், தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
வெடித்த போராட்டத்தால், கோட்டாபய ராஜபக்சே தப்பித்து ஓடியுள்ளார். கட்டுகடங்காத கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிவருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையின் சமையலறைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், இலங்கையின் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து, மாளிகையின் சமையலறைக்குள் உணவுகளை சமைக்க தொடங்கி சாப்பிட்டுள்ளார்கள்.
மேலும், நீச்சல் அவரது வீட்டு நுழைவாயிலில் உள்ள பெரிய நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து உற்சாகமாக குளியல் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
WATCH: Protestors exploring the kitchen at President’s House in Sri Lanka. #SriLankaProtests
— BNN Newsroom (@BNNBreaking) July 9, 2022
?: @Dailymirror_SL pic.twitter.com/slVFbIIpqO
More footage, SriLanka protesters in the presidential pool.#srilanka #lka #GoHomeGota #SriLankaProtests pic.twitter.com/PhoD9dc5iC
— Nawfan (@Nawfan1234) July 9, 2022