மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைப்பு... இலங்கையில் இரவு இரவாக தொடரும் பதற்றம்!
இலங்கையில் தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் உயிராபத்து அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதமாக அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
Happening now at Temple Trees… protestors are trying to break in.#ProtestLK #GoHomeRajapaksas #KnockKnock pic.twitter.com/epLDekR9vf
— Marlon Ariyasinghe (@exfrotezter) May 9, 2022
கைமீறி செல்லும் இலங்கையின் நிலைமை! இந்தியாவிற்குள் தஞ்சமடையும் மக்கள்
இந்த அமைதிப் போராட்டத்தை ஒடுக்க பதவி விலகும் முன்பாக மகிந்த ராஜபக்சே வன்முறை குண்டர்களை களமிறக்கினார். ஆனால் இந்த குண்டர்களை பொதுமக்கள் திருப்பி அடித்து துரத்தி அடித்தனர்.
அத்துடன் கொழும்பு காலிமுகத்திடல் வன்முறை இலங்கையில் சிங்களரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Video - MP Sanath Nishantha’s house has been set on fire. pic.twitter.com/DJUPUNPCH2 #LKA #SriLanka #SriLankaCrisis
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) May 9, 2022
பதவி விலகிய முன்னாள் பிரதமர் ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகளை சிங்களரே தேடி தேடி தாக்குகின்றனர். ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
Footage showing the Lamborghini cars that belong to the Avenra Garden Hotel in Negombo have been set fire. #SriLanka pic.twitter.com/hXCJ9r90xE
— Kavinthan (@Kavinthans) May 9, 2022