சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டிச் சென்ற ஸ்ரீதர் சேனா!!! உருக்கமாக பேசிய வீடியோ வைரல்
நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 8வது சீசனில் முதலிடத்தை பிடித்து வெற்றி வாகை சூடியுள்ளார் ஸ்ரீதர் சேனா.
தொடக்கத்தில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஸ்ரீதர் சேனா, வெற்றி பெற்றதால் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அன்றைய தினமே, ஸ்ரீதர் சேனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபலங்கள், தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் வெற்றி கோப்பையுடன் ஸ்ரீதர் சேனா வெளியிட்டுள்ள வீடியோவில், எல்லோருக்கும் பெரிய நன்றி. இன்றைக்கு இந்த வெற்றி எனக்குக் கிடைக்கக் காரணம் நீங்கதான்.
உலகம் முழுவதும் நிறையப் பேர் என்னை உங்க வீட்டுப் பையனா பார்க்குறீங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
இந்த அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என பேசியபடி தன்னுடைய வெற்றியை மக்களுக்காக சமர்பித்துள்ளார்.