ஜான்வி கபூரை தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா அவரின் தங்கை? அவரே கூறிய தகவல்!
நடிகை ஜான்வி கபூரை தொடர்ந்து அவரது தங்கை குஷி கபூரும் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் மற்றுமன்றி இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் இன்றும் மக்கள் மனங்களில் பசுமையான நினைவுகளாக உயிர்ப்புடன் இருக்கின்றார்.
தமிழில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இவரது மூக்கு சற்று தட்டையாக இருந்ததால் எடுப்பாக இல்லை என சொல்லப்பட்டது.
அதனால் அந்த காலத்திலேயே அறுவை சிகிச்சை செய்துகொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றினார்.
அம்மாலை போலவே ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை மாற்றிகொள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அது மட்டுமன்றி அவர் உடலில் பல பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
தற்போது இவர்களை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் சர்ஜரி செய்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய அக்கா போலவே மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு விரிவுபடுத்தும் சில காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, அவர் ஆம் நான் அழகு சிகிச்சை செய்துகொண்டேன் என உண்மையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சில நடிகைகள் இதை ரகசியமாக வைத்துக்கொள்ள நினைக்கின்ற போதிலும் இவர் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |