மகளின் காதலுக்கு ஓகே சொன்ன ஸ்ரீதேவியின் கணவர்? வைரலாகும் புகைப்படம்
தன்னுடைய மகள் ஜான்வி கபூரின் காதலனுடன் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாலிட்டின் நாயகி ஜான்வி கபூர்
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவர் போனி கபூர், தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்துள்ளார்.
இவரது மகள் ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார்.
தற்போது பாலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர், விரைவில் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
இவர் நடித்த படங்கள் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டடிக்க ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் போனி கபூரின் மகனும், பிரபல நடிகருமான அனில் கபூரின் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்தது.
மகளின் காதலனுடன் புகைப்படம்
இதில் கலந்து கொண்ட போனி கபூர், மகளது காதலனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த காதலன் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா ஆவார்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஷிகர் பஹாரியா உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில் கூட இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.