கதவில் இருந்த மணியை அடித்தால் அதிர்ஷ்டம்... இலங்கை பொன்னம்பலவாணேசர் கோயிலின் சுவாரசியம்
இலங்கையில் கொழும்பில் கொச்சிக்கடையில் இருக்கும் பொன்னம்பலவாணேசர் கோவில் என்ற சிவன் கோவில் பிரபலமானது. இந்த கோவில் குறித்த பல பிரமிக்க வைக்கும் தகவலை காணொளியில் காணலாம்.
இலங்கை பொன்னம்பலவாணேசர் கோயில்
இக்கோயில் 1856ம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது.
பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.
இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன.
மேலும் இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் தஞ்சை கோவிலின் அடிப்படையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கோவிலைக் குறித்த பல விபரங்களை கீழே காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |