இலங்கையின் பொருளாதார நெருக்கடி.. ராஜினாமா செய்தாரா? மகிந்த ராஜபக்சே
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியால், மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
மேலும், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள். மக்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த இன்னொரு காதல்.. என்ன தெரியுமா?
பிரதமர் ராஜினாமா
இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும், ஆனால் ராஜினாமா கடித்தை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இலங்கை அரசில் அங்கம் வகித்து வந்த சுதந்தர கட்சியின் 14 எம்.பிக்கள் இலங்கை அரசில் இருந்து விலகிகொள்வதாக கடிதம் அளித்துள்ளனர்.
ஒரு வார காலத்திற்குள் காபந்து அரசு அமைக்க வேண்டும் என இலங்கை அதிபருக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இதனால் இலங்கயைில் உள்ள அலரிமாளிகையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.