ஈழத்தமிழர் கதையில் புலி பொம்மை- இயக்குநர் காட்ட வருவது இதுதானாம்.. பிரபலம் பளீச்
Tourist family திரைப்படத்தில் புலி பொம்மை காட்டப்படுவதற்கான காரணம் இது தான் என பிரபலம் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tourist family
ஈழத்தமிழர்களின் கதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டும் திரைப்படம் தான் Tourist family.
இந்த படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். சசிக்குமாருக்கு ஜோடியாக இடுப்பழகி சிம்ரன் நடித்திருந்தார்.
ஒளிப்பதிவு அரவிந்த் விஸ்வநாதன் மற்றும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமன் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை நசெரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Tourist family திரைப்படத்தில் யுத்தகாலத்திற்கு பின்னர் இலங்கை மக்களின் குடிபெயர்வு மற்றும் கோவிட்-19க்குப் பிந்தைய பொருளாதார சவால்களின் பின்னணி என்பவற்றை கருவாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் கஷ்டங்களுக்கு மத்தியில் மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்வதே மேல் என கள்ளத்தனமாக இடம்பெயர்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, Tourist family திரைப்படத்தில், புலி பொம்மையொன்று காட்டபட்டுள்ளதாகவும், பின்னர் படத்தில் அந்த காட்சிகள் இல்லையென்றும் பிரபலம் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், Tourist family திரைப்படத்தில் மறைமுகமாக காட்டப்படும் விடயங்கள் என்னென்ன என்பதனை இயக்குநர் ஒருவர் தெளிவாக பகிர்ந்துள்ளார். அப்படி என்ன கூறியிருக்கிறார் என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
