மெது மெதுவென பொல் ரொட்டி- சீனி சம்பல்- ஸ்ரீலங்கா ஸ்டைலில் செய்வது எப்படி?
இந்தியர்களின் உணவை விட இலங்கையர்களின் உணவு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
அப்படியாயின், இலங்கை வாழ் சிங்கள மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் பொல் ரொட்டி- சீனி சம்பல்.
இந்தியர்கள் எப்படி தோசை, இட்லியை விடமாட்டார்களோ, அதே போன்று இலங்கையில் உள்ள சிங்களவர்களும் பொல் ரொட்டி- சீனி சம்பலை விடமாட்டார்கள். காலையில் ஹோட்டல்களிலும் இது தான் அதிகமாக சாப்பிடக் கொடுப்பார்கள்.
அந்த வகையில், இலங்கையில் இவ்வளவு பிரபலமாக இருக்கும் இந்த பொல் ரொட்டி- சீனி சம்பலை அவர்களின் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கோதுமை மா
- உப்பு
- சுடு நீர்
- சீனி
- வெங்காயம்
- ஏலக்காய், கிராம்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை, ரம்பை
- கடுகு
- தேங்காய் பூ
- துண்டு மிளகாய்
பொல் ரொட்டி- சீனி சம்பல் தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு, அதனுடன் கொஞ்சமாக உப்பு, சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் அனைத்தையும் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர், கோதுமை மாவை நன்றாக கலந்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் சூடு இறங்கிய உடன் தேங்காய் பூவை கொட்டி ரொட்டி மா பதத்திற்கு பிசைந்து எடுக்கவும்.

இது ஒரு புறம் இருக்கையில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, போட்டு தாளிக்கவும்.
அடுத்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, ரம்பை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் பொழுது சீனி கொஞ்சம் போட்டு கிளறி விடவும்.

கடைசியாக துண்டு மிளகாய் போட்டு நன்றாக கிளறி விடவும். இறுதியாக உப்பு கொஞ்சம் போட்டு இறக்கினால் சீனி சம்பல் தயார்.
சூடான தேநீருடன் பொல் ரொட்டி- சீனி சம்பல் வைத்து பரிமாறிலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |