Sunday Samaiyal: நாவுறும் வாசனையுடன் சிக்கன் டிக்கா கிரேவி- இந்த 2 பொருள் சேர்க்காமல் பண்ணுங்க
பொதுவாக ஞாயிற்றுகிழமை வந்து விட்டாலே வீட்டில் அசைவ உணவுகளுக்கு பஞ்சமே இருக்காது.
மற்ற நாட்களில் நாம் கெஞ்சினாலும் சிலர் அசைவ உணவுகளை சமைக்கமாட்டார்கள். ஆனால் ஞாயிற்றுகிழமைகளில் நாம் கேட்காமல் அசைவ உணவுகளின் மணம் ஒவ்வொரு வீடுகளிலும் மணமணக்கும்.
இரவு வேளை சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டம் வைத்திருப்பவர்கள் அதற்கு என்ன குழம்பு செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கீங்களா? ஆம், என்றால் சப்பாத்தி, பூரி செய்தால் அதற்கு காரசாரமான சிக்கன் டிக்கா கிரேவி செய்து சாப்பிடலாம்.
இந்த சிக்கன் டிக்கா கிரேவி சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த கிரேவி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தமான சிக்கன் டிக்கா கிரேவி எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சிக்கன் டிக்கா கிரேவி
ஊற வைக்க தேவையான பொருட்கள் | கிரேவி செய்யத் தேவையான பொருட்கள் |
* எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ | * எண்ணெய் - 1/4 கப் * வெண்ணெய் - 1 டீஸ்பூன் |
* புளிக்காத கெட்டி தயிர் - 1/2 கப் | * வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் |
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் | * தக்காளி - 3 (அரைத்தது) * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் |
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் | * மல்லித் தூள் - 1 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் |
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன் | * சீரகத் தூள் - 1 டீஸ்பூன் * காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் |
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் | * கரம் மசாலா - 1 டீஸ்பூன் |
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன் | * உப்பு - சுவைக்கேற்ப |
* கரம் மசாலா - 1 டீஸ்பூன் | * சர்க்கரை - 1 டீஸ்பூன் |
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் | * கசூரி மெத்திரி - 1 டீஸ்பூன் |
* உப்பு - சுவைக்கேற்ப | * சுடுதண்ணீர் - தேவையான அளவு |
* எண்ணெய் - 3 1/2 டீஸ்பூன் | * பிரஷ் க்ரீம் - 3/4 கப் |
கிரேவி செய்முறை
1. முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து அதில், புளிக்காத கெட்டித் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து, 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்கவும்.
2. சரியாக 1/2 மணிநேரம் கழித்து, ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து சிக்கனை எடுத்து வெளியில் வைத்து விட்டு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கனை முக்கால்வாசி வேக வைக்கவும்.
3. இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன் ப்ரை செய்து விட்டு அந்த எண்ணெயுடன் வெண்ணெயையும் சேர்த்து உருக விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
4. பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு வதங்க விட்டு, அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை மற்றும் கசூரி மெத்தியையும் சேர்த்து கிளறவும்.
5. எண்ணெய் பிரியும் வரை வேக விட்டு, அதில் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, அதனுடன் கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறவும்.
6. அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு சிக்கனை 10 நிமிடம் வரை வேக வைக்கவும். கடைசியாக அதில் பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் டிக்கா கிரேவி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |