விசித்திரமான கண்களுடன் இலங்கையில் பிறந்த ஆட்டுக்குட்டி!
இலங்கையில் விசித்திரமாக பிறந்த ஆட்டிகுட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசித்திரமாக பிறந்த ஆட்டுக்குட்டி
இலங்கையில் - யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்கு பகுதியில் ஒரு விவசாயின் வீட்டில் தான் இந்த ஆட்டிக்குட்டி பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விவசாயி ஆடு வளர்ப்பை வாழ்வாதார தொழிலாக செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வீட்டிலிருக்கும் ஆடு குட்டியீன்றுள்ளது. இதனை பார்க்கும் போது மனிதர்களை போல் காட்சியளித்துள்ளது.
மேலும் ஆட்டுக்குட்டியின் கண்கள் இரண்டும் பக்கத்து பக்கத்தில் இருக்கிறது.
இந்த செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் குறித்த ஆட்டுக்குட்டியை இறைவன் கொடுத்த வரம் என்று முனுமுனுத்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ காட்சி
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இறைவன் கொடுத்த வரமாக பாருங்கள் என வாழ்த்துக்கள் தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.