பிக் பாஸ் வீட்டின் சகுனியாக மாறும் இலங்கை பெண்! பிக் பாஸிடம் சிக்கிய மற்றுமொரு போட்டியாளர்..
பிக் பாஸில் முக்கிய போட்டியாளரான விக்ரமன், பிக் பாஸ் விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸின் புதிய டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது ஐந்தாவது வாரம் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த வாரத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இராஜ குடும்பம் டாஸ்க் கொடுத்துள்ளது. இந்த டாஸ்க்கில் ராபட் மாஸ்டர் ராணியாகவும், ரக்ஷிதா ராணியாகவும், இலங்கை பெண் இளவரசியாகவும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த டாஸ்க் ராஜ குருவாக இருக்கும் விக்ரமன் டாஸ்க்கை மறந்து ஜனனியிடம் “நீங்கள் ஒன்றும் இளவரசியல்ல சதாரண போட்டியாளர் தான் என விதிமுறைகளை மீறி பேசி வருவதாக ஜனனி, தளபதியான அசீமிடம் குற்றம் சாற்றியுள்ளார்.
வைரலாகும் ஜனனியின் சகுனி நாடகம்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி மீண்டும் ஒரு சண்டைக்கு திட்டம் தீட்டுகிறார் மற்றும் ஜனனி தான் பிக் பாஸ் வீட்டின் சகுனி என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Part 1#Vikraman vs #JananyAkka #Janany goes to #Azeem for justice murikutu varan . Gathering whole royal family against #Vikraman . Idhu dhan da corner . #Robert and #Rachitha gather #BiggBossTamil #BiggBoss6Tamil #Vikramanarmy pic.twitter.com/64UZqAFOwS
— siva (@winsiva1994) November 17, 2022