இலங்கையின் காரசாரமான கணவாய் கறி...ஒரு முறை இதை சேர்த்து செய்து பாருங்க
கணவாய் உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு மீனினமாகும். இது ஒக்டாபஸ் இனத்தை சேர்ந்தது. ஒவ்வொரு நாட்டிலும் இதை ஒவ்வொரு வகையாக சமைக்கின்றனர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் இந்த கணவாய் மீனை இலங்கை முறையில் எப்படி கறி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்யும் முறை
முதலில் கணவாய் மீயை நன்றாக சுத்தம் செய்து எடுத்து அதை தண்ணீர் ஊற்றாமல் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் மூடி வேக வைக்க வேண்டும்.
2 நமிடங்களின் பின்னர் அதை திறந்து தேங்காய் பால், மஞ்சள், ரோஸ்டட் பௌடர், உப்பு, பட்டை, தக்காளி சேர்த்து கலந்து விட்டு கொஞ்சம் கொதிக்க விட வேண்டும்.
ஒரு கொதி வந்ததும் இதை இறக்கி தனியே வைத்து விட்டு வேறுறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணை ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, ரம்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் இதில் வேகவைத்த கணவாயை வடிகட்டி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அது கொஞ்சம் நன்றாக வதங்கியதும் அதில் கணவாயை வடிகட்டிய பாலை ஊற்ற வேண்டும்.
இதை நன்றாக வதக்கி 8 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இப்போது இதை இறக்கி எதற்கு வேண்டுமானாலும் சைட்டிஸ் ஆக சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |