கோடை ஸ்பெஷல் மாங்காய் ரசம்: யாரும் செய்திடாத ரெசிபி- செய்து பாருங்க
கோடைக்காலம் ஆரம்பித்து விட்டால் மாங்காய்களுக்கு பஞ்சம் இருக்காது. குறைந்த விலையில் சந்தையிலும் மாம்பழங்கள் வாங்கலாம்.
இதுவரையில் நீங்கள் மாங்காயை வைத்து ஏகப்பட்ட ரெசிபிகள் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பலரும் அறியாத ரெசிபி தான் மாங்காய் ரசம்.
இந்த ரசத்திற்கு புளி, தக்காளி என எந்தவித பொருளும் தேவையில்லை. இதனால் மாங்காய் ரசத்தை கோடையில் அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
அந்த வகையில் கோடைக்கால தாகத்தை தணிக்கும் மாங்காய் ரசம் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* மாங்காய் - 1
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 இன்ச்
* ஊற வைத்த துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காய் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ரசப்பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
ரசம் வைப்பது எப்படி?
- முதலில் தோல் நீக்கிய மாங்காய்களை துண்டுகளாக்கி வைக்கவும்.
- அதன் பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மாங்காய், பச்சை மிளகாய், தட்டி வைத்துள்ள இஞ்சி, ஊற வைத்துள்ள துவரம் பருப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்.
- சரியான நேரத்திற்கு குக்கரைத் திறந்து பருப்பு, மாங்காய் மசித்து கொள்ளவும்.
- இதனை தொடர்ந்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். அடுத்து, பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- ரசப்பொடியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு, வேக வைத்து மசித்த மாங்காய், பருப்பு இரண்டையும் சேர்த்து 3 கப் அளவு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும்.
- நுரைக்கட்டி கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |