ஹோட்டலில் சாப்பிட்ட இலங்கையருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உணவு பார்சலில் தூண்டிலுடன் சிக்கிய மீன் !
இலங்கை ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
ஹோட்டலில் இலங்கையர் ஒருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டிலுடன் இருந்துள்ளது.

இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
ஹோட்டல் உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். சுத்தம் சோறு போடும்.
ஆனால், சில ஹோட்டல்களில் அசுத்தம்தான் சோறு போடுகிறது.
அந்த அளவுக்கு சமையலறை, ஊழியர்கள் என்று எங்கும் அசுத்தம் பரவி இருக்கிறது.
இதெல்லாம் தெரிந்தும் அலட்சியத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் அதுபோன்ற ஹோட்டல்களுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களாலேதான் அதுபோன்ற ஹோட்டல்கள் பெருகி வருகின்றன.
ஹோட்டல்களில் உணவு சூடாகவும், சுவையாவும் இருந்தால் மட்டும் போதாது.
சுத்தமாகவும், ஆரோக்யமனதாகவும் இருக்கவேண்டியது அவசியம்.
