இலங்கை - யாழ்ப்பாணம் வந்தால் இந்த இடங்களை மறக்காம பாருங்க! பக்தி நிறைந்த பயணமாக அமையும்..
பொதுவாக சுற்றுலா என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது இலங்கை தான்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பொருளாதார அடிப்படையில் பின் தங்கியிருப்பதால் நாணய பெறுமதி வீதம் குறைந்து விட்டது.
இதனால் குறைந்த செலவில் நிறைய இடங்கள் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி வருகை தருவார்கள்.
அந்த வகையில் இலங்கை - யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்
1. நல்லூர் கந்தசாமி கோவில்
போர்க் கடவுளான முருகக் கடவுளுக்கு இந்த இடம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கோயிலை தான் "நல்லூர் திருவிழா" என்று அழைப்பார்கள். பக்தி நிறைந்தவர்கள் இங்கு அதிகமாக வருகை தருவார்கள். மேலும் ஆண்கள் இங்கு மேலாடையில்லாமல் பிராத்தணைகளை மேற்கொள்ளலாம்.
2. யாழ்ப்பாணக் கோட்டை
போர்த்துகீசியர்களால் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோட்டை இதுவாகும். இது அரசாங்க இடமாக தற்போது ஆக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பல போர்கள் இலங்கையில் நடந்தாலும் இந்த இடம் இன்றும் சுற்றலா பயணிகள் விரும்பும் இடமாகவுள்ளது.
3. யாழ்ப்பாண திராட்சை விவசாயம்
யாழ்ப்பாணத்தில் அதிகமான திராட்சை பயிர்ச்செய்கை இருக்கின்றது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் பயிர்ச் செய்கை முறை பார்த்து கற்றுக் கொள்ளலாம். அத்துடன் அதிகமாக மக்கள் தோட்டங்களிலுள்ள பழங்களை பறித்து அவர்களின் நாடுகளுக்கும் கொண்டு செல்வார்கள்.
4. சுண்டிக்குளம் தேசிய பூங்கா
முன்னதாக சுண்டிக்குளம் சரணாலயம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் தற்போது தேசிய பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கருப்பு-வால் காட்விட், கருப்பு-சிறகுகள் கொண்ட ஸ்டில்ட், பிரவுன்-ஹெட் குல், பொதுவான சாண்ட்பைப்பர், பெரிய ஃபிளமிங்கோ ஆகியவற்றை காணலாம்.
5. யாழ்ப்பாண தொல்பொருள் அருங்காட்சியகம்
யாழ்ப்பாண தொல்பொருள் அருங்காட்சியகத்தில் புத்த மற்றும் இந்து தொல்பொருட்களின் அரிய சேகரிப்பு பொருட்கள் உள்ளன. இவையனைத்தும் கலைப்பொருட்கள் மரம், உலோகம் மற்றும் கல் ஆகியவற்றை மூலப்பொருட்களாக கொண்டு செய்யப்பட்டவையாகும். குழந்தைகளுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |