இலங்கை வந்தால் இந்த இடங்களை மிஸ் பண்ணீறாதீங்க.. அழகோ அழகு!
பொதுவாக இலங்கை என பார்க்கும் போது சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நாடாக பார்க்கப்படுகின்றது.
இங்கு இயற்கையான இடங்கள் மற்றும் கைக்கு எட்டிய பொருளாதாரத்தில் இருப்பதாகவும் அதிகமானவர்கள் சீசன் சீசனுக்கு படையெடுக்கிறார்கள்.
இதன்படி, கடந்த பதிவுகளில் இலங்கையில் இருக்கும் அதி விஷேசமாக இடங்களை பற்றி பார்த்திருந்தோம்.
அந்த வகையில், இலங்கையில் இன்னும் என்ன இடங்களை மனங்களை கொள்ளையடிக்க இருக்கின்றது என்பதனை பார்க்கலாம்.
1. சிவப்பு மசூதி
இந்த மசூதி இலங்கை - கொழும்பு பகுதியில் இருக்கின்றது. இதனை இலங்கைவாசிகள் ஜமீல் அல்ஃபர் ஜும்மா மஸ்ஜித் என்று அழைக்கிறார்கள்.
இங்கு இஸ்லாமியர்கள் உட்பட சுற்றுலா பயணிகளும் வருகை தந்து பார்வையிடுகிறார்கள். அத்துடன் இங்கு வைத்து என்ன சொன்னாலும் நடக்கும் என்று ஒரு கதையும் இருக்கின்றது.
2. தெஹிவளை தேசிய உயிரியல் பூங்கா
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இலங்கையின் பூர்வீக விலங்குகளை வைத்திருக்கிறார்கள். காட்டில் வாழும் மிருகங்களை நேரில் பார்க்க வேண்டும் என்றால் இங்கு வருகை தரலாம்.
அத்துடன் இலங்கையில் உள்ள உயிரியல் பூங்கா பொதுவாக கொழும்பு உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பூங்காவில் 72 பாலூட்டிகள், 65 பறவைகள், 31 வகையான ஊர்வன, 89 வகையான மீன், 03 வகையான நீர்வீழ்ச்சிகள் மற்றும் 30 வகையான பட்டாம்பூச்சிகள் போன்றவை உள்ளன.
3. கொழும்பு தாமரை கோபுரம்
தெற்கு ஆசியாவில் மிக உயரமான கோபுரம் இது தான். இது சீனர்களால் கொழும்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு தாமரை கோபுரம் என்றும் அழைக்கிறார்கள். இந்த கட்டிடத்திற்கு மேல் நின்று முழு கொழும்பையும் பார்க்க முடியும். சுற்றுலா பயணிகளுக்கு இருப்பிட வசதிகளும் இங்கு இருக்கின்றது.
4. பெடேகனா ஈரநில பூங்கா
இந்த இடம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைக்கு அருகாமையில் இருக்கின்றது. இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா? பூங்கா முழுவதும் ஈர நிலப்பகுதியில் தான் அமைக்கபட்டுள்ளது.
அத்துடன் இந்த 18 ஹெக்டேர் பரப்பளவில் பல நீர்வாழ் பறவைகள் மற்றும் இலங்கை மற்றும் ஆசிய ஈரநிலங்களுக்கு சொந்தமான பட்டாம்பூச்சிகள், டிராகன்ஃபிளைஸ் மற்றும் பாலூட்டிகள் போன்ற பிற விலங்கினங்கள் உள்ளன. இங்கு வேடர்களை காணலாம்.
5. கல்கிசை கடற்கரை
தெஹிவளை கடற்கரையை தான் கல்கிசை கடற்கரை என அழைக்கிறோம். இந்த பகுதி கொழும்பிற்கு அருகாமையில் இருக்கின்றது. நீச்சலுக்கு ஏற்றது,
மேலும் நீங்கள் கடற்கரையின் அற்புதமான அழகை அனுபவிக்கும் நேரடி இசை மற்றும் கலைஞர்களுடன் கஃபேக்களைப் பார்வையிடலாம். மேலும் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் மணல் கடற்கரை காலை யோகா மற்றும் தியானம் மற்றும் மாலை ஓய்வெடுக்க ஏற்ற இடமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |