காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்: நீங்களும் செய்யலாம்
பருவ நிலையில் மாற்றம் வரும் போது தான் நாம் எல்லோரும் பாரம்பரிய உணவின் பக்கம் செல்வோம். இந்த பாரம்பரிய உணவுகளால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்களை அப்படியே விரட்ட முடியும்.
பொதுவாக ரசம் என்றால் அதில் பல மூலிகை பொருட்கள் சேர்த்து செய்வார்கள்.
இதை சாப்பிடவோ அல்லது குடித்தாலோ உடலில் இருக்கும் சளியை அப்படியே வெளியேற்றும். இந்த பதிவில் நாம் இலங்கையின் பாரம்பரியத்தில் செய்யப்படும் காரசாரமான தக்காளி மிளகு ரசத்தின் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மல்லி விதை 2 டீஸ்பூன்
- மிளகு 3 டீஸ்பூன்
- சிறிய சீரகம் அரை டீஸ்பூன்
- பூண்டு 6 பல்
- சின்ன வெங்காயம் 10
- தக்காளி 02
தாளிக்க
- எண்ணெய் 1 டீஸ்பூன்
- கடுகு
- பெரிய சீரகம்
- சின்ன வெங்காயம் 5
- கறிவேப்பிலை
- வர மிளகாய் 3
- பெருங்காய பொடி அரை டீஸ்பூன்
- தண்ணீர் 5 கப்
- புளித்தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
செய்யும் முறை
இந்த ரசத்தை செய்வதற்கு முதலில் ஒரு உரல் எடுத்து அதில் மல்லி மிளகு சின்ன வெங்காயம் பூண்டு போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உரலில் இருந்து எடுத்து தனியே வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணை ஊற்றி அது சூடானதும் கடுகு, பெரிய சீரகம், சின்ன வெங்காயம் 5 சிறிதாக வெட்டியது, கறிவேப்பிலை, வர மிளகாய் துணடுகளாக வெட்டியதை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதில் இடித்து வைத்துள்ள கலவையை சேர்க்க வேண்டும். இதை இரண்டு தடவை கிண்டி விட்டு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் தண்ணருக்கு தேவையான அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இறுதியாக புளித்தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி 1 மணிநேரம் அப்படியே விட வேண்டும்.
பின்னர் இதை எடுத்து வடிகட்டி குடித்தால் சுவையான தக்காளி மிளகு ரசம் தயார். இதை நாள்தோறும் குடித்து வந்தால் நெஞ்சு சளி விலகி ஆரோக்கியமாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |