இலங்கையில் தொடர் பதற்றம்... பதவி விலகிய மகிந்த ராஜபக்சே.. நடப்பது என்ன?
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கு ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து,. கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதனிடையில், கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான் மர்மமான முறையில் இறந்தால்... எலான் மஸ்க் டுவிட்டால் பரபரப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். மேலும், ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் பதற்றம் காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர்களும் தங்களது ராஜினாமாவை அறிவித்தனர்.