இலங்கையின் மாபெரும் கண்ட போராட்டம் - உயிர் தப்பிய போலீசார்!
இலங்கையின் பொருளாதார சிக்கல் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த அளவிற்கு பொருளாதார பெரும் நெருக்கடியில் உள்ளது.
இலங்கை மக்களும் சிக்கி தவித்து வருகின்றனர்.சிக்கலை சீர் செய்யவும், ஆளும் அரசை கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன பேரணி நடந்தது வருகிறது.
வன்முறையாக மாறிய போராட்டம்

இதனையடுத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக ஒரு குழு செயற்படவே அங்கு இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்படும் நிலை உருவானது.
இந்த மோதல் கைகலப்பாக மாற, பதற்றத்தை தணிப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் ஒரு வழியாக பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் போலீசார் முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.