நூலிழையில் தேற்ற இலங்கைக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி! சோகத்தில் ரசிகர்கள்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களை எடுத்தது. இதனை அடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து, கிட்டத்தட்ட தோல்வி பெறும் நிலைக்கு இந்திய அணி சென்றது.
எனினும் எதிர்பாராத விதமாக ஜோடி சேர்ந்த தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் கூட்டணியால் அன்றைய நாள் ஆட்டம் தலைகீழாக மாறி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
— cric fun (@cric12222) July 20, 2021
இது இலங்கை வீரர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மெதுவாக விளையாடியதாக இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணியிடம் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த இலங்கை அணிக்கு, இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.