இலங்கையின் ஸ்ரீ தலதா மாளிகை சிறப்பு! பலரும் அறியாத சுவாரசியம்
ஸ்ரீ தலதா மாளிகை இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான கண்டி நகரில் அமைய பெற்றுள்ளது
ஶ்ரீ தலதா மாளிகை வரலாற்று கலாச்சார ரீதியாகவும் சிறந்த சுற்றுலா தலமாகவும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களின் மிக முக்கியமான ஓர் வழிபாட்டு தலமாக ஸ்ரீ தலதா மாளிகை கருதப்படுகின்றது. பண்டைய மன்னர் ஆட்சி காலங்களில் மிக முக்கியமான அரசு தீர்மானங்கள் தளதமாளிகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
கௌதம புத்தரின் ஸ்ரீ தந்த தாது இந்த தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் எட்டு திக்கிலும் வாழும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிக அதிக எண்ணிக்கையில் இந்த தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1988 ஆம் ஆண்டு யுரோஸ்கோவின் உலக உரிமைகளில் ஒன்றாக ஸ்ரீ தலதா மாளிகை அறிவிக்கப்பட்டிருந்தவை குறிப்பிடத்தக்கது.
பௌத்த மக்களின் மிக முக்கியமான புனித தலமான தலதா மாளிகை வாஸ்து விஞ்ஞான அம்சங்களையும், மலை நாட்டு கலாச்சார அம்சங்களையும், பண்டைய தலதா மாளிகை அம்சங்களையும் கொண்ட அமைந்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
1592 164 ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த விமல தர்மசூரிய மன்னரினால் கண்டி தலதா மாளிகை முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்டது. இந்த மாளிகை போர்த்துக்கேயரின் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் இரண்டாம் ராஜசிங்க மன்னன் தலதா மாளிக இரண்டாவது முறையாக நிர்மாணித்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாளிகையும் ஒல்லாந்தர்களினால் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பின்னர் 1687 ஆம் ஆண்டு அரசனாக முடிசூட்டி கொண்ட இரண்டாம் விமலதர்மசூரியன் தலதா மாளிகை மீள நிர்மாணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாளிகையும் அழிவடைந்து போனதாகவும் அதன் பின்னர் அவரது புதல்வர் ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க மன்னரினால் 1707 1739 ஆம் ஆண்டுகளில் தற்போது காணப்படும் ஸ்ரீ தளதமாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளது
அதன் பின்னர் கண்டியை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தமிழ் மன்னர்களும் ஸ்ரீ நரேந்திரசிங் மன்னரும் ஸ்ரீ தலதா மாளிகையை புனரமைத்து பாதுகாத்துள்ளனர்.
அதன்பின்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னர் தற்போது நாம் காணும் தலதா மாளிகையை புனர்நிர்மானம் செய்து பயன்படுத்தி உள்ளார் தலதா மாளிகைக்குள் பல்வேறு அருங்காட்சியகங்கள் பௌத்த மத முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் காணப்படுவதுடன் பண்டைய கலை கலாச்சார அம்சங்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை படைப்புகளை நாம் விகாரையில் காண முடிகிறது.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.