வெளியான சூப்பர் தகவல்... இந்த தரமான சம்பவத்துக்கும் காரணம் அந்த மனுசன் தானா? லீக்கான காட்சி
தீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்த தோனி தான் காரணம் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) 98 ரன்கள் அடித்து அசத்தினார்.
She said yesssss.! ?
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) October 7, 2021
Congratulations Cherry.! Stay Merry.! ??#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/qVmvVSuI7A
இந்த நிலையில், இப்போட்டி முடிந்ததும் நேராக கேலரிக்கு சென்ற சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் (Deepak Chahar), அங்கிருந்த தனது தோழி ஜெயா பரத்வாஜிடம் (Jaya Bhardwaj) காதலை வெளிப்படுத்தினார்.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் மோதிரம் மாற்றி அங்கேயே நிச்சயம் செய்து கொண்டனர்.
அப்போது அருகில் இருந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தோனியின் மனைவி சாக்ஷி ஆகியோர் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.