தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல் போட்டி பாதிக்குமா?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் மீதமுள்ள 31 போட்டிகள் கடந்த 19ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
இதையடுத்து, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனாலும், திட்டமிட்டபடி இன்றைய ஆட்டம் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
T Natarajan has tested positive for COVID-19, and is presently in isolation.
— SunRisers Hyderabad (@SunRisers) September 22, 2021
We wish you a swift and full recovery, Nattu. ? https://t.co/vZDP6gvLLT pic.twitter.com/6x7OSunc7m