மறைந்த சித்துவின் நிலைமை நட்சத்திராவுக்கும் வரக்கூடாது... பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீநிதி!
நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீநிதி தற்போது அளித்திருக்கும் தகவல் ஒன்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறி சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறியிருந்தார்.
அதன் பின்னர், சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு என பேசினார்.
இதெல்லாம் ஒரு பக்கம் சென்றாலும் தற்போது நெருங்கிய தோழியான நட்சத்திராவைப் பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், அவ நட்சத்திரா ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்திருக்கா. தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார்.
ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது. நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை,
இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, விஜே சித்து நிலைமை நட்சத்திராவுக்கு அடிக்கிறாங்க, பயமா இருக்கு என்றும் அவர் கூறினார்.
ஆனால் இவ்வளவும் பேசிவிட்டு அந்த வீடியோவை தற்போது நீக்கியும் விட்டார். ஸ்ரீநிதியின் குற்றச்சாட்டுக்கு இப்போது வரை நட்சத்திரா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.