உலகிலேயே அதிகமான செல்வ வளம் கொண்ட கோவில் எது? எங்கிருக்கிறது தெரியுமா?
இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய செல்வ வளம் மிக்க ஆலயமாகத் திகழ்வது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம்தான். அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள மிகப் பிரபலமான புராதன ஆலயம் ஒன்று உள்ளது. இது உலகிலேயே மிக அதிகமான செல்வ வளம் கொண்ட கோவிலாகத் திகழ்கிறது.
தமிழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்தோடு மிகவும் நெருங்கிய அந்தக் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டு காணிக்கை செலுத்துகின்றனர்.
இந்தியாவில் அதிகம் காணிக்கை செலுத்துகின்ற கோவில் எது என்றால் திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் நம் நினைவுக்கு வரும். இந்தகோவில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார ஆலயம் என்று நீங்கள் கருதினால், உங்கள் கருத்து தவறு. இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய செல்வ வளம் மிக்க ஆலயமாகத் திகழ்வது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ஆலயம்தான்.
இது இன்றைய பக்தர்களின் தினசரி காணிக்கையால் கிடைத்த செல்வ வளம் அல்ல. முந்தைய ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும், பெரும் பக்தர்களும் காணிக்கையாகவும், நன்கொடையாகவும், நிவந்தமாகவும் அளித்துள்ள செல்வக் குவியலாகும். பல நூற்றாண்டுகளாக இக் கோவிலின் ரகசிய நிலவறைகளில் உறங்கிக் கிடந்த பழங்காலப் பொக்கிஷங்கள் திடீரென வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்தே, இக்கோவிலின் செல்வ வளம் உலகுக்குத் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் கிடைத்துள்ள பழங்கால நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம் எனத் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி மிகத் துல்லியமாக என்னால் கணக்கிட முடியவில்லை.
இந்த அளவு பொக்கிஷங்கள், திருவனந்தபுரம் கோவில் ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். இக்கோவிலின் புராதனப் பெருமைகள் கேரளா தற்போது தனி மாநிலமாக இருந்தாலும், பண்டைய தமிழ் மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் ராஜ்ஜியம்தான் கேரளம்.
கேரள மாநிலத்தினர் பேசும் மலையாளம்கூட, பண்டைய தமிழோடு காலப்போக்கில் சம்ஸ்கிருதம் கலந்து உருவானதுதான். இத்தகு கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலும் பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றே.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் உருவான தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இக் கோவிலின் பெருமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பொற்கோவில் என்று புகழப்படும் கோவில் இதுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், கண்ணனூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் அக்காலத்தில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேர நாட்டுப் பகுதிகள், அக்காலத்தில் சுமேரியா, கிரேக்கம், ரோம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பும் கொண்டுள்ளன.
இதனால் திருவனந்தபுரம் கோவிலுக்கு காணிக்கையாக அக்காலத்தில் பெருமளவு தங்கம் குவிந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கண்ணனூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் அக்காலத்தில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேர நாட்டுப் பகுதிகள், அக்காலத்தில் சுமேரியா, கிரேக்கம், ரோம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பும் கொண்டுள்ளன. இதனால் திருவனந்தபுரம் கோவிலுக்கு காணிக்கையாக அக்காலத்தில் பெருமளவு தங்கம் குவிந்துள்ளது.
இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் இருப்பதாகவும் அதற்குள் தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குகளும் உள்ளன. கடந்த 1750-ஆம் ஆண்டில் அன்றைய திருவிதாங்கூர் மன்னரான அனிழம் திருநாள், தமது அரசையே பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாகச் செலுத்தினார்.
அதனால் இன்று வரையில் அந்த அரச வம்சத்து ஆண்கள் பத்மநாப தாசர்கள் என்றும் பெண்கள் பத்மநாப சேவினிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். வெளிச்சத்துக்கு வந்த ஏராளமான செல்வ வளத்தோடு, வெளிவராத மர்மங்களோடும் கம்பீரமாக காட்சி தருகிறது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயம்.
- Maalai Malar