Viral Video: சும்மா இருந்த பாம்பை சீண்டிய அணிலின் குறும்புத்தனம்... கடைசி வரை கட்டாயம் பாருங்க
அணில் ஒன்று சும்மா இருந்த பாம்பு ஒன்றினை விடாமல் சீண்டி தனது குறும்புத்தனத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அணிலின் குறும்புத்தனம்
அணில் என்றால் அழகு தான். ஆனால் அது செய்யும் குறும்புத்தனத்தை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. அந்த அளவிற்கு ரசிக்க வைக்கும் விதமாகவே இருக்கும்.
ஆனாலும் இங்கு குறும்புத்தனம் செய்யும் அணிலுக்கு சற்று தைரியம் அதிகம் என்று தான் கூற வேண்டும். ஆம் சும்மா படுத்துக் கொண்டிருந்த பாம்பிடம் வம்பிழுத்துள்ளது.
ஒருமுறை, இரண்டுமுறை அல்ல அடுத்தடுத்து பாம்பினை சீண்டுவதற்கு கீழே உள்ள மணலை அதன் மீது தூக்கி போடுகின்றது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பாம்பு ஒரு கட்டத்தில் தனது கோபத்தை காட்ட ஆரம்பித்தது. ஆனாலும் நான் என்னோட குறும்புத்தனத்தை விடமாட்டேன் என்ற தோரணையில் அணில் தனது விளையாட்டை தொடர்ந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |