குளிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் குளிக்கவும்! வெறும் 10 நிமிடத்தில் என்னென்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?
பேக்கிங் சோடா என்பது அடிப்படையில் சோடியம் அயனி மற்றும் பைகார்போனேட் அயனியின் கலவை ஆகும். இது பெரும்பாலும் கிருமிகளை அழிக்கவும், சுத்தப்படுத்தும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குளிப்பதால் உங்கள் தசைகள் திறக்கப்பட்டு அழுத்தம் குறைகிறது, உடலைத் தளர்த்துவதைத் தவிர இன்னும் அதிக பலன் உண்டாகிறது. அந்தவகையில் தற்போது அந்த பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
பேக்கிங் சோடாவில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பூஞ்சை தொற்று பாதிப்பைப் போக்க உதவுகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. பேக்கிங் சோடா குளியல் மூலம் சிறுநீரில் உள்ள அமிலம் சமநிலைப்படுத்தப்படுகிறது, கிருமிகள் வெளியேற்றப்படுகிறது மற்றும் இதர பாதிப்புகளை அகற்றுகிறது.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலியை குறைக்கவும் உதவுகிறது. எக்சிமா பாதிப்பின் அறிகுறிகளை குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது. இந்த வகை சரும பதிப்பில் ஒரு நபரின் சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது. சரும அரிப்பின் அளவை குறைக்க பேக்கிங் சோடா உதவுகிறது. விஷ செடிகள் மூலம் உண்டாகும் தடிப்புகளைக் குணப்படுத்த பேக்கிங் சோடா உதவுகிறது.
தடுப்புகளை ஏற்படுத்தும் எண்ணெய்களை சருமம் உறிஞ்சுவதைத் தடுக்க பேக்கிங் சோடா குளியல் உதவுகிறது. சருமத்தில் உண்டாகும் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றைக் குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது. குழந்தையின் சருமம் மிகவும் சென்சிட்டிவானது மற்றும் மென்மையானது. ஒரு நொடியில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குழந்தையிடம் பரவுகிறது.
இதனை தடுக்க பேக்கிங் சோடாவை பெரியவர்கள் பயன்படுத்தும் அதே அளவை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம், பாதிக்கப்பட்ட பகுதியை 10 நிமிடங்கள் மட்டுமே ஊற வைக்கவும். பேக்கிங் சோடா உங்கள் சருமத்திற்கு இதமளித்து வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை உள்ளடக்கியது ஈஸ்ட் தொற்று பாதிப்பு நிலையை சரி செய்ய உதவுகிறது.
சருமத்தில் எல்லா இடத்திலும் அரிப்பை ஏற்படுத்தக்கூடியது சின்னம்மை அரிப்பை போக்க பேக்கிங் சோடா உதவுகிறது. ஒரு நாளில் மூன்று முறை பேக்கிங் சோடா கொண்டு குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பேக்கிங் சோடா பயன்படுத்தி எவ்வாறு குளிப்பது? வெதுவெதுப்பான நேரில் 1-2 கப் பேக்கிங் சோடா கலந்து கரைய விடவும். ¼ கப் முதல் 2 கப் பேக்கிங் சோடா பயன்படுத்தி குளிக்கலாம்.
வெதுவெதுப்பான நீர் உள்ள டப்பில் இந்த சோடாவை கலப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா கரைந்தவுடன் 40-50 நிமிடங்கள் அந்த டப்பில் அமர்ந்து உங்கள் உடலை தளர்த்திக் கொள்ளலாம். குளித்து முடித்த பின்னர் உங்கள் உடலை ஒரு டவல் கொண்டு முழுவதும் துடைத்துவிடவும். குளிக்கும் அறையில் நறுமண மெழுகுவர்த்தி மற்றும் நல்ல இசை ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
