தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்? இதன் அர்த்தம் இதுவா!
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... என்ற விடுகதை வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்திவை பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
இந்த தொடரானது வெறும் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டதோ, சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல! இதன் பின்னால் ஒரு புராண கதை இருக்கின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
என்ன அர்த்தம்?
இதன் பொருள், ஒருவரின் இயல்பான குணத்தை மாற்றி அவரை பொய்யாக அலங்கரித்தால், அது அவருக்குப் பொருந்தாமல் போகும், அல்லது எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகும் என்பதுதான்.
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர்தான் தட்டான் என குறிப்பிடப்படுகின்றது. இங்கு தட்டான் - மஹாபலிச் சக்கரவர்த்தியின் கொடை குணத்தை குறிக்கிறது.
தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது என்று பொருள்படுகின்றது. அதாவது அவரின் ஈகை உள்ளத்தை கெடுப்பதாகும்.
புரணங்களின் பிரகாரம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்பார். இங்கு குட்டை பையன் என குறிப்பிடப்படுவது பெருமாளின் வாமன அவதாரத்தை குறிக்கிறது.
ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரைவார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்வார்.
அந்த சச்தர்ப்பத்தில் குட்டைப் பையனாக வாமன அவதார்தில் வந்தவர், ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தியபோது சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிவிடும்.
அதன் மூலம் கொடுப்பதில் வள்ளலான மஹாபலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.
தானம் கொடுப்பவர்களை தடுக்க நினைப்பது பெரும் பாவம் அவ்வாறு செய்பவர்களுக்கு பெருமாள் தகுந்த தண்டனை கொடுப்பார்.
இது தான் "தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…" என்ற விடுகதையின் உண்மையான அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |