சத்துக்களை அள்ளித்தரும் பாசி பயறு லட்டு... ஈஸியா செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு சத்துக்களை அள்ளித்தரும் பாசி பயறு. அதிலும் பெண் குழந்தைகளுக்கு அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் கொடுக்கின்றது.
தற்போது சுவையான பாசி பயறு லட்டு எவ்வாறு செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாசி பயறு - 200 கிராம்
நாட்டுச்சர்க்கரை 250 கிராம்
வேர்கடலை - 100 கிராம்
ஏலக்காய் - 4 நம்பர்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 3 கரண்டி
செய்முறை
பாத்திரம் ஒன்றில் தேவையான பாசி பயறை எடுத்து நன்று கழுவிக்கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றினை சூடு செய்து, அதில் பாசி பயறை போட்டு சற்று மணம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு கொடியாக அரைத்துக் கொண்டு, வாணலியில் சிறிது நெய் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் மாவு கலவையை போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு இவற்றினை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டையாக எடுத்துக் கொண்டால் சுவையான பாசிபயறு லட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |