அடிக்கடி இந்த கீரையை மறக்காமல் சாப்பிடுங்கள்! இனி இரத்த ஓட்டம் சூப்பரா வேலை செய்யும்
பொதுவாக எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கீரைகள் உண்பது வழக்கம்.
இவ்வாறு கீரைகள் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான கல்சியம், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகரிக்கிறது.
இதன்படி, இரத்தம் தொடர்பான நோய்களுக்கு அகத்திக் கீரை எடுத்துக் கொள்வது சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அகத்திக் கீரை பயன்களையும் அதிலுள்ள சத்துக்களையும் பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
அகத்திக் கீரையின் மகத்துவம்
பொதுவாக இரத்த தொடர்பான பிரச்சினையுள்ளவர்களுக்கு அகத்திக்கீரையை வார ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கும் இது நிரந்தர தீர்வளிக்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியவரகளை வரை சளி பிரச்சினைகள் இருக்கும். இவ்வாறு ஏற்படும் போது அகத்தி கீரை சாற்றை 2 தூளி சாற்றை மூக்கில் விட வேண்டும். இதனுடன் ஒற்றைத் தலைவலி, ஜலதோஷம் போன்றவையும் குணமடையும்.
பிரசவத்திற்கு பிறகு தாய்பால் சுரப்பது குறைவாக இருக்கும் பெண்கள் அகத்திக்கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் தாய்சுரப்பு அதிகமாகும். ஏனெனில் இந்த கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
அகத்திக்கீரையை தேமல் நோய் உள்ளவர்கள் அகத்தி கீரை இலைகளை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதுப் போல் அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றாக மறையும்.
இந்த கீரையிலுள்ள இலை முதல் காய் வரை அணைத்தும் மருத்துவ குணமிக்கது. மேற் குறிப்பிட்ட நோய்களை தவிர்த்து குடல்புண், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி போன்றவற்றை குணமாக்கிறது. இது போன்ற நோய் நிலைமைகளுக்கு பச்சையாக கீரையை மெண்டு விழுங்க வேண்டும்.