இதய பாதிப்பு இருந்தால் கீரை சாப்பிடக் கூடாதா? குழப்பத்திற்கு பதில் இதோ
இருதய பாதிப்பு உள்ளவர்கள் தங்களது உணவில் கீரை எடுத்துக் கொள்ளலாமா என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை சாப்பிடக்கூடாது என்ற கருத்து மக்களிடையே இருந்து வரும் நிலையில், இதற்கு மருத்துவர் கூறும் பதிலை தற்போது தெரிந்து கொள்வோம்.
கீரை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
கீரையை இருதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் யாரும் பரிந்துரைப்பதில்லை என்று கூறப்படுகின்றது.
மெக்கானிக்கல் வால்வ் அறுவைசிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள், வார்ஃப்ரைன் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள் கீரையை தவிர்க்க வேண்டுமாம்.
ஏனெனில், டிரக் நியூட்ரியன்ட் இன்ட்ராக்ஷன் நடைபெறும் போது, மருந்தின் உறிந்து கொள்ளும் தன்மை குறையத் தொடங்குவதால், கீரையை தவிர்க்க வேண்டும்.
யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கீரையில் அதிகப்படியான ஃபைபர் சத்துகள் இருப்பதால், இதயத்திற்கு நன்மை அளிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே சூழலில், இருதய பாதிப்பால் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், எந்த வகையான கீரைகளை, எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |