சிலந்தி வால் கொம்பு விரியனின் வேட்டை காட்சியை பார்த்ததுண்டா? வைரலாகும் அரிய காணொளி!
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான சிலந்தி வால் கொம்பு விரியனால் பறவையொன்று கண்ணிமைக்கும் நொடியில் கொடூரமாக வேட்டையாடப்படும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த காட்சியில் ஒரு சிறிய "சிலந்தி" தரையில் ஊர்ந்து செல்வது போல் தெரிகிறது. பசியுள்ள ஒரு பறவைக்கு, அது சிரமமில்லாத ஒரு உணவு போலத் தோன்றுகிறது.

ஆனால் அது சிலந்தி, சிலந்தியே அல்ல. சிலந்தி வால் கொம்பு விரியன் (Pseudocerastes urarachnoides) இது உலகின் மிகவும் விசித்திரமான பாம்புகளில் ஒன்றாக அறியப்படுகின்றது.
இந்த பாம்பினுடைய வால் நுனி ஒரு சிலந்தியின் தோற்றத்தையும் அசைவையும் ஒத்திருப்பதால், பூச்சிகளை உண்ணும் பறவைகளை இது ஈர்க்கின்றது.

குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள்
அப்படி இரை என நம்பிவரும் பறவைகளை இந்த பாம்புகள் நொடிப்பொழுதில் இரையாக்கிக்கொள்கின்றன. இரையானது அசையும் வாலில் கவனம் செலுத்தும் போது, இது கச்சிதமாக மறைந்திருந்து, இரையானது அதன் எல்லைக்குள் வந்தவுடன் மின்னல் வேகத்தில் தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த சிலந்தி வால் கொம்பு விரியன்.
மேற்கு ஈரானின் பாறை நிறைந்த நிலப்பரப்புகளில் இந்த வகை பாம்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அரிய வேட்டைக்காட்சி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |