சிக்கன் பிரியாணியை ஓவர்டேக் செய்யும் மிளகு வறுவல் முட்டை பிரியாணி! இப்படி செய்து பாருங்க
பரியாணி பல மக்கலால் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். இது பல நிகழ்வுகளில் ஒரு ஸ்பெஷல் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றது. பிரியாணி என்றால் அதில் பல வகையாக செய்வார்கள்.
சைவம் அசைவம் என அதில் பல வகைகள் உண்டு. அந்த வகையில் தான் இன்றைய பதிவில் மிளகு வறுவல் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கப்போகிறோம்.இதில் பல வகையான மசாலாப்பொருட்கள் போட்டு கமகம என்ற வாசனையாக இந்த பிரியாணி செய்யப்படும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சுவையான மிளகு வறுவல் பிரியாணி செய்யும் எளிமையான முறைகளைத் தெரிந்துக் கொள்ள தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 2 இலைகள்
- 2 இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1 சிறிய ஜாதிபத்திரி
- 8 கப் தண்ணீர்
- தேவையான உப்பு முட்டை மிளகு வறுக்க
- 1 டீஸ்பூன் மிளகு
- சோளம் 1 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் விதைகள் 1தேக்கரண்டி
- சீரகம் 4 டீஸ்பூன்
- எண்ணெய் 2 பே இலைகள்
- 2 இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1 சிறிய ஜாதிபத்திரி
- 2 வெங்காயம்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 டீஸ்பூன் நெய்
- 1 டிஸ்பூன் கொத்தமல்லி தூள்
- கொத்தமல்லி இலைகள்
- புதினா இலைகள்
- கறிவேப்பிலை
- 5-6 கடின வேகவைத்த முட்டைகள்
- 4 டீஸ்பூன் தயிர்
- தேவையான உப்பு
செய்யும் முறை
முதலில் பாசுமதி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், ஜாதிபத்திரி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின் அதில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு போட்டு வேக வைக்கவும். இதனை வடித்த வைத்துக் கொள்ளவும்.
பின் மிளகு வருவலை தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும்.
பின் அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும். பின் அதே எண்ணெயில் ஒரு பட்டை, ஏலக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
மற்றொரு நறுக்கிய வெங்காயாயத்தை போட்டு வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். இதன் பின்னர் அதில் 2 டீஸ்பூன் நெய் போட்டு வதக்கவும். பின் அரைத்து வைத்திருந்த மிளகு பொடியை சேர்க்கவும்.
பின் அதில் தயிரை சேர்க்கவும். மேலும் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி சேர்க்க வேண்டும். பின் ஒரு தக்காளியை லேசாக அரைத்து சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பை சேர்த்து சிறிது நேரம் காய விடவும்.
இதில் 6 முட்டைகளை வேக வைத்து எடுத்து பாதியாக வெட்டி அதனுடன் சேர்க்கவும். பின்னர் இதில் வேக வைத்து எடுத்த சாதத்தை போடவும். பின்னர் ரோஸ்ட் செய்த வெங்காயம், நறுக்கிய புதினா, நெய் என அடுத்தடுத்து சேர்த்து மூடி வைக்கவும்.
அந்த மூடி மேல் பாரமான பொருளை வைத்த மூட வேண்டும்.இதை ஒரு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். பின் எடுத்து பரிமாறினால் சுவையான மிளகு வறுவல் பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |