கொஞ்சம் கூட மசாலா சட்டியில் ஒட்டாமல் மீன் வறுவலை செய்யணுமா?
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான மீன் வருவல் ஹொட்டல் சுவையில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது கடல் உணவுகள் தான். அதிலும் மீன் என்றால் அவ்வளவு விரும்பி சாப்பிடுவார்கள்.
அதிலும் மீன் குழம்பு வைப்பதை விட வறுவல் செய்தால் அதன் சுவை வேற லெவலில் இருக்கும். இந்த பதிவில் சுவையான மீன் வறுவல், அதுவும் சட்டியில் ஒட்டாமல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வாவல் மீன் - 10 துண்டுகள்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிது
நீர் - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு விட்டு கிளறி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கிண்ணம் ஒன்றில் மிளகாய், மல்லி, மஞ்சள் தூள்களையும், அதனுடன் உப்பு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரி பவுடர் மற்றும் சிறிது நீரை சேர்த்து ஓரளவு நீராக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இந்த மசாலாவை மீனில் தடவி குறைந்தது 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அடுப்பில் தவாவை வைத்து அதனுடன் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
சட்டியில் ஒட்டாமல் ஹொட்டல் சுவையில் அருமையான மீன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |