ஸ்பெஷல் தயிர் சாதம்.... இப்படி செய்தால் யாருக்கு தான் பிடிக்காது?
தயிர் பிரியர்களுக்கு நிச்சயம் தயிர் சாதம் பிடிக்கும்.
தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் தயிர் சாப்பிடலாம்.
தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது.
இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். தயிரை சாதத்தில் கலந்து தயிர் சாதம் செய்தும் சாப்பிடலாம்.
இன்று ஸ்பெஷல் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

- பச்சரிசி - 1 கப்
- பால் - அரை கப்
- புளிக்காத புதிய தயிர் - ஒன்றை கப்
- இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது - 1 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயம் - அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிது
- கடுகு - அரை டீஸ்பூன்
- மிளகாய் வற்றல் - 3, பொடியாக நறுக்கிய முந்திரி - 4 டேபிள் ஸ்பூன்
- திராட்சை - 20
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் தாளிதக் கலவை, சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
அருமையான ஸ்பெஷல் தயிர் சாதம் ரெடி.