ஸ்பெயினை சேர்ந்த சொகுசு ஹோட்டலுக்கு இப்படி ஒரு மவுசா... அதுவும் கட்டணமே இல்லையாம்!
ஸ்பெயின் அமைந்துள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சொகுசு ஹோட்டல் ஒன்றிற்கு வாடிக்கையாளர்கள் இலவசமாக தங்க புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக பலருக்கும் கடலுக்கு நடுவே குட்டி தீவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்குவது தான் கனவாக இருக்கும். புதிதாக திருமணம் ஆனவர்கள் கூட பலரும் சென்று வருவார்கள்.
அந்த வகையில், ஸ்பெயினை சேர்ந்த ஹோட்டல் ஒன்றில், இலவச அழைப்பை ஒன்று வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்திருக்கிறது.

கட்டணம் இலவசம்
இந்த ஹோட்டல் ஆனது தென் மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இபிஸா தீவில் அமைந்துள்ளது. சுற்றுலாவாசிகளுக்கு சொர்க்கமாக திகழும் இந்த தீவில் ஏராளமான சொகுசு விடுதிகள் அமைந்துள்ளன.
சுற்றி அமைந்துள்ள கடல் நடுவில் குட்டி தீவு, கண்ணை கவரும் இடமான இந்த இபிஸாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகின்றனர். இங்கு ஸிரோ சூட் ரூம் (Zero Suite) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இங்கு ஒரு இரவு இலவசமாக வாடிக்கையாளர்கள் தங்கிக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் ஏதுவும் கிடையாது. மேலும், இந்த சூட் ரூமில் தங்குபவர்களுக்கு ஒரு கண்டிஷனும் விதிக்கப்பட்டுள்ளது.

என்ன ஸ்பெஷல்
இந்த அறையில் கண்ணாடியால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில், உள்ளே இருப்பது அப்படியே வெளியே தெரியுமாம். இந்த அறையில் இருக்கும் கழிவறை மட்டும் வழக்கம்போல மறைவான சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஹோட்டலை இப்படி வடிவமைக்க கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களை ஈர்க்கும் விதமாக வடிவமைத்ததாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளிவந்த உடனே பலரும் இந்த அறைக்கு செல்ல போட்டிபோட்டு வருகிறார்களாம்.