SPAM மெயில்களினால் தொல்லையா?
உங்கள் ஜிமெயில் கணக்கில் அடிக்கடி ஸ்பாம் மெயில்களினால் தொல்லை ஏற்படுகின்றதா?அவ்வாறானால் உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்பாம் மெயில்களில் அன்சப்ஸரைப் செய்ய முடியும்
1. ஜிமெயில் கணக்கிற்குள் லொக் ஆகி அனைத்து ஸ்பாம் முகவரிகளையும் தெரிவு செய்க (முக்கியமான முகவரிகள் எதனையும் தெரிவு செய்து விட வேண்டாம்)
2. I என்ற ஐகானை (i icon)அழுத்தவும் ‘Report spam' அல்லது ‘Report spam and unsubscribe'. ஆகிய ஓப்சன்கள் தென்படும்.
3. நீங்கள் தெரிவு செய்த மெயில் ஐடிக்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் அதில் முக்கியமானவை எதுவும் இல்லையென்றால் Report spam and unsubscribe என்பதனை தெரிவு செய்க
4. அதன் பின்னர் உங்களுக்கு ஸ்பாம் மெயில்கள் வராது.
ஸ்பாம் மெயில்களை கண்டுபிடிக்க பில்டர்களை உருவாக்குதல்
1. ஜிமெயிலை திறக்கவும் தேடல் பெட்டியில் (search box) கிளிக் செய்து unsubscribe என டைப் செய்யவும், இதன் மூலம் அனைத்து வகையான விளம்பர ஸ்பாம் மெயில்களும் பட்டியலிடப்படும்
2. அனைத்து ஸ்பாம் மெயில்களையும் தெரிவு செய்க எனினும் நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் ஐடிக்கள் முக்கியமான அனுப்புனர்களின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளதா என்பதனை உறுதி செய்க
3. மேல் பகுதியில் காணப்படும் மூன்று புள்ளிகள் (…) கிளிக் செய்க பின்னர் Filter messages like these என்பதை தெரிக
4. தற்பொழுது create filter என்பதனை தெரிக, இந்த மெயில்களுக்கு என்ன செய்ய வேண்டுமென தெரிவு செய்க.
இந்த மெயில்கள் தானியங்கி அடிப்படையில் அழிக்கப்பட வேண்டுமாயின் create filter தெரிவு செய்து Delete என்பதனை தெரிக
5. மெயில் பில்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பாப்ஆப் மெஸேஜ் ஒன்று தோன்றும். தற்காலிக மெயில் ஐடி பயன்படுத்தல் உங்களது பிரதான மெயில் ஐடியை அனைத்து இணைய தளங்களிலும் பயன்படுத்தாது, தற்காலிக ஐடி ஒன்றை பயன்படுத்திக் கொள்ளவும்.
சில வேளைகளில் ஸ்பாம் மெயில்கள் மெய்யான கணக்குகளைப் போன்று தோற்றமளிக்கும். எனவே தற்காலிக மெயில் ஐடி ஊடாக நீங்கள் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.