இரவும் பகலாக தேடி கண்டுபிடிக்கப்பட்ட வைர கற்கள்... கடைசியில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
தென்னாப்பிரிக்க நாட்டில் வைரம் கிடைக்கிறது என வெளியான வதந்தியை நம்பி கற்களைத் தேடி எடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவை படிகக் கற்கள் என தெரியவந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வறுமை தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடுகளில் தான் வைரங்கள் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தான் கண்டெடுக்கப்பட்டது. அதன் எடை 3,106 கேரட்.
அதன்பின்னர், உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில் தான் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் தென்னாபிரிக்காவின் குவாசுலு நடால் மாகாண மலைப்பகுதிகளில் வைரம் கிடைக்கிறது என தகவல் பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் கற்களை தேடி எடுத்தனர்.
ஆனால், அவை வைரக்கற்கள் அல்ல வெறும் படிகக்கற்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காரணம் கொரோனா காரணமாக அங்குள்ள மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதனால், அங்கே வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.