திருமணத்தை விட்டு விலகும் தென் கொரிய இளைஞர்கள் - காரணம் என்ன?
தென் கொரியாவில் இளைஞர்கள் திருமணம் செய்யும் மனப்பான்மை மிகவும் குறைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள தென் கொரியாவில், திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,93,000 ஆக இருந்தது,
இது முந்தைய ஆண்டை விட 9.8 சதவீதம் குறைவானதாகும். எண்ணிக்கை 1970-க்குப் பிறகு மிகக் குறைவு யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி அறிக்கையில் வெளியான தகவல்கள் கூறுகின்றன.
தென் கொரியா இது தொடர்பான தரவுகளைத் தொகுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 10-வது ஆண்டாக திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நல்ல வேலை கிடைக்காததால், தென் கொரிய இளைஞர்கள், டேட்டிங், திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுதல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள்.
இதைத்தவிர, கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக பல பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின. தென் கொரிய ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த ஆண்டு 33.4 வயதை எட்டியதாக கூறுகிறது.
முன்னதாக, மணமகளின் சராசரி திருமண வயது 31.1 ஆண்டாக இருந்ததாக கூறப்படுகிறது. திருமணமான தம்பதிகளில் 17.1 சதவீதம் பேர் 5 முதல் 9 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தென் கொரியர்களின் எண்ணிக்கை 13,000 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 14.6 சதவீதம் குறைவானது.